ஞாயிறு, 21 டிசம்பர், 2008

தமிழ்ப்பள்ளிகளுக்கு 1600 தற்காலிக ஆசிரியர்கள்

தமிழ்ப்பள்ளிகளுக்கு 1600 தற்காலிக ஆசிரியர்கள் என்ற செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்ததை அறிவோம்.

இது பெருமைக்குரிய செய்தி அல்ல, மாறாக நம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய விஷயம்.

  1. என் இந்த தற்காலிக ஆசிரியர் நியமனம்.......பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்க தவறிய கல்வி அமைச்சை சாடுகிறேன்.
  2. கடந்த காலங்களிலும் இதே பிரச்சனை தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கி வந்துள்ளன என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
  3. நாடு தழுவிய நிலையில் பல இந்தியர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் கல்வி அமைச்சு ஒரு வருடத்திற்கு ஏறத்தாள 200 இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. என் இந்த ஓரவஞ்சனை.........
  4. அறிவியல் மட்டும் கணித ஆசிரியர் பயிற்சிக்கு மிகக் குறைவான இந்தியர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.என் இந்த நிலைமை? இதனால் எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் வேற்று இன ஆசிரியர்களே அதிகமாக பனி புரிவார்கள்....
  5. அரசியல்வாதிகளே...... நமது iனத்தின் பிரதிநிதிகளே...... நமது உரிமைகளே தட்டிக் கேட்க உங்களை தேர்ந்தேடுத்தோம். எழுந்திரு....விழித்திரு....

5 கருத்துகள்:

  1. நானும் இச்செய்தியைப் படித்து மனம் வெதும்பிப் போனேன். தமிழ்ப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில், பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். இப்பிரச்சனைக்கு நாம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே என் அவா..

    பதிலளிநீக்கு
  2. மிகச் சரியான சிந்தனை. இவ்வளவு பேர் பற்றாக்குறை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தார்களாக்கும். இத்தனை ஆண்டுகளாக நம்மைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது 'ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது'. அந்த ஓநாய்க்கு எமது சமுதாயத்தின் வக்காளத்தும் வாழ்த்துகளும் குவிவது வியப்பிலும் வியப்பு ஐயா..!

    இவ்வளவு நாள் 1500 ஆசிரியர்களுக்கான இடங்களை நிறைவு செய்யாமல் விட்டது ஏன் என்று யாராவது கேள்வி கேட்டார்களா பாருங்கள்?

    பதிலளிநீக்கு
  3. மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
    வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

    தங்களுக்குப் பொங்கல்,
    திருவள்ளுவராண்டு 2040
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    தமிழிய விழுமியங்களோடு
    தமிழியல் வழியில் வாழ்ந்து
    வெற்றிகள் பெறுவோம்.

    தங்கள் வலைப்பதிவை என்னுடைய
    'திருமன்றில்' திரட்டியில்
    இணைத்துள்ளேன்.

    http://thirumandril.blogspot.com
    பார்க்கவும். நன்றி..!

    பதிலளிநீக்கு
  4. இனிய அன்பரே வணக்கம்.

    மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

    நாள்: 25-1-2009(ஞாயிறு)
    நேரம்: பிற்பகல் 2.00
    இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

    இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
    http://thirutamil.blogspot.com

    தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
    திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

    பதிலளிநீக்கு
  5. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
    சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

    பதிலளிநீக்கு