வெள்ளி, 5 டிசம்பர், 2008

தமிழ்ப்பள்ளி

www.tamilusi.blogspot.com என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற விமர்சனம் கீழ் வருமாறு :
Wednesday, December 3, 2008

தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்து
ஒரே மொழி பள்ளி முறையை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோ முக்ரிஸ் மகாதீர் கூறிய பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் மொழி பற்றாளர்கள் கருத்துகளை வெளியிட்டு இரண்டு நாட்களாக தமிழ் நாளில்தல்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. தமிழ் பள்ளிகளை மூடிவிடுவதே சரி என்பது என் கருத்து.

ஏன் தமிழ் பள்ளிகளை மூடி விடவேண்டும்? பல காரணங்கள் சொல்கிறேன்..........
நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சி-யில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு ஆணுப்பியவர்கள். இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள். மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரயுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சாமிவேலு மற்றும் சரவணன் தவிர பெரும்பாலான தலைவர்கள் (சுப்ர, பண்டிதன், palanivelu, டிஏபி, பிபிபி, கெரக்கான், கேஅடிலன் தலைவர்கள் உட்பட) மற்றும் பலர்தங்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.


தமிழ் மொழி வளர தமிழ் பள்ளிகள் மட்டும் போதும் என்பது ஒரு மூட நம்பிக்கை. அமரர் அன்பானந்தன் அவர்கள் காலத்தில் வாசிக்கும் பழக்கத்தை பெரும் அளவில் இளைஞர்களிடையே ஊக்குவித்து வந்தார். அன்று பலர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் படிக்கும் எழுதும் திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த இயக்கமும், கட்சியும், சங்கமும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய தலைவர்களுக்கு தேவை, எப்படி பணம் பண்ணுவது, இளைஞர்களை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது. அன்று பெரும்பாலனவர்கள் வீட்டில் கல்கண்டு, விகடன், குமுதம், மாத நாவல்கள் என்று படிப்பதற்கு இருக்கும். வாரம் அல்லது மாத தமிழ் இலக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல் நடக்கும். மொழி வளர்க்க பெரும் முயற்சிகள் நடக்கும். அனால் இன்று மொழி வளர்பதற்கு தலைவர்கள், இயக்கங்கள் போதுமான முயற்சிகள் செய்வதில்லை. அழகு ராணி, வேட்டி ராஜா, சினிமா பாடல் போட்டி போன்றவையே இன்றைய கலாசாரமாக போய் கொண்டிருக்கிறது. மொழி அறிவு வளராத எந்த சமூகமும் உருபடாது என்பது அறிந்தும் மொழி வளர்க்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் கடமை செய்யாமல் இருபது மகா கேவலம். போதாத குறைக்கு சிவாஜி திரைப்பட பிரிவியு ஷோ காண்பதற்கு முதல் ஆளாக செல்வார்கள் அல்லது துணிகடை, சாப்பாட்டு கடை திறப்பு விழாவுக்கு செல்வார்கள். அண்மையில் மக்கள் தலைவர் ஒருவர் பி ஜெ-யில் பாப் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்கினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். எப்படி மோசமான சமுதாயதிற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.


இன்று பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் எழுதும் மாணவர்களுக்கு சந்தையில் தமிழ் மொழி தேர்வு வழி காட்டி நூல் கிடையாது. எப்போதாவது பட்டத்துக்கு பிந்திய ஆசிரியர்கள் பயிற்சி மாணவர்கள் சில தேர்வு வழி காட்டி நூல்கள் எழுதுவார்கள். அதும் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்காது. இந்த எஸ்.தி.பி.எம். பரிட்சைக்கு தமிழ் எடுக்கும் மாணவர்கள் கதி அதோ கதிதான். ஒரே ஒரு தமிழ் கோவை இருக்கும். அதுவும் மீசியும்மில் உள்ளது போல யார் கையிலாவது இருக்கும். அதை வாங்குவதற்குள் பரிட்சையே முடிந்துவிடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் என்ன படிக்க வேண்டும் என்றே பல மாணவர்களுக்கு தெரியாது. எஸ்.தி.பி.எம்.-க்கு டேக்ஸ் புத்தகமும் கிடையாது. அனால் தமிழ் படி, தமிழ் படி என்பார்கள். இன்று வரை எந்த அரசியல் கட்சியாவது, தமிழ் இயக்கமாவது தமிழ் தேர்வு வழி காட்டி நூல் எல்லா தமிழ் எழுதும் மாணவர்களுக்கு கிடைக்கும் வகை பற்றி அக்கறை உள்ளதா? பல மாணவர்கள் தமிழ் பரிட்சை எழுதாதற்கு காரணம், என்ன படிக்க வேண்டும் என்று தெரியாததே.... இந்த சிக்கலை போக்குவதற்கு எந்த தலைவராவது பேசி இருப்பாரா? தமிழ் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு சிக்கல்கள் பல உள்ள போது ஏன் நமக்கு தமிழ் பள்ளிகள் ?
என் உறவினர் ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அனைவரையும் மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பினார். காரணம் கேட்டபோது , அவர் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும், என்ஜிநீர் ஆக்க வேண்டும் என்றார். நான், ஏன் தமிழ் பள்ளிக்கு அனுப்பினால் மகள்கள் டாக்டர், எஞ்சினியர் ஆகாதா என்று கேட்டேன். அதற்க்கு அவர், உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்க வையுங்கள், என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். தமிழ் பள்ளியில் படித்தால் தங்கள் பிள்ளைகள் முட்டாள் ஆகி போகும் என்று கருதும் மானங்கெட்ட இந்த சமுதாயத்திற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.
நம் குறைகளை முதலில் களைய முற்படுவோம். பிறகு சண்டைக்கு தயார் ஆவோம். கத்தி இல்லாமல் போருக்கு சென்று பயன் இல்லை.


என் கருத்து :
  1. மற்றவர்களை மாற்ற முனைவோம். ஆனால் அவர்கள் மாறுவார்கள் என்று சட்டம் இல்லை.அவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் நாம்அனுப்பக்கூடாதா ? நமக்கு என்று கொள்கை கிடையாதா ? அனுப்பாதவர்கள் சிலரே ......மாறாக தமிழ்ப்பள்ளியை நம்பி அனுப்பும் பெற்றோர்கள் பலர்....... சிலரைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.
  2. மொழி அறிவு வளராத எந்த சமூகமும் உருபடாது என்பது அறிந்தும் மொழி வளர்க்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் கடமை செய்யாமல் இருபது மகா கேவலம் என்று குறிப்பிட்ட நீங்கள் தமிழ்ப்பள்ளியை மூடினால் தமிழின் வளர்ச்சி மேலும் பாதிப்படையும் என்று நீங்கள் உணரவில்லையா....! இந்நாட்டில் தமிழ் மொழி வளர தமிழ்ப்பள்ளிகள் அடித்தளமாக இருக்கின்றது என்பதனை யாரும் மறுத்து விட முடியாது.
  3. தமிழ் பரிட்சை எழுதுவதற்கு மட்டும் நாம் தமிழை படிக்க வில்லை. தமிழ் மேல் உள்ள பற்றால் நாம் தமிழ் கற்கின்றோம். பரிட்சைக்கு படிக்க வேண்டும் என்றாலும் அதற்கு தேவையான நூல்கள் எளிதான முறையில் நம் நாட்டில் கிடைக்கும். பலர் சிறப்பான முறையில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  4. மானங்கெட்ட இந்த சமுதாயத்திற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும் என்று எழுதியுள்ளிர்கள். நீங்களும் அந்த சமுதாயத்தில் ஒரு அங்கம் என்று மறந்து விடாதீர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதையும் சாதிக்க வில்லையா ?பிறகு என் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் வெகுவாக அதிகரித்து வருகிறார்கள்...?
  5. நம் குறைகளை முதலில் களைய முற்படுவோம் என்று சொல்கிறிர்கள்...... யார் சரி செய்வது......உங்களுக்கும் அந்த கடமை இல்லையா...யாரோ ஒருவர் வந்து சரி செய்வார் என்று காத்திருப்போமா.....நம்மால் முடிந்ததை செய்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா ?
  6. தமிழ்ப்பள்ளியை மூடினால் பிரச்சனை சரியாகி விடுமா?தமிழ் பள்ளியை மூடினால் தமிழ் எவாறு வளரும் ?
  7. தேசியப் பள்ளியை நம்பி தமிழ் வளருமா ?

உங்க்கள் விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

(அடுத்த பகுதியில் மேலும் வளரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக