ஞாயிறு, 30 நவம்பர், 2008

தமிழ் நாளிதழ் வாங்குவோம்

மலசியாவில் 20 லட்சம் தமிழர்கள் வாழ்கிறோம்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்று வைத்துக்கொண்டால் ஐந்து லட்சம் குடும்பங்கள் உண்டு.
இவர்களில் மூன்று லட்சம் குடும்பம் மட்டும் தினமும் தமிழ் நாளேடு வாங்கினால் நமது தமிழ் தினசரிகள் அதிகமாக விற்கப்படும்.
இவ்வாறு நடந்தால் நமது மொழி இந்த நாட்டில் செழித்து நிற்கும்.
இந்த துறை அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
அதிகமான எழுத்தாளர்களை உருவாக்கும்.
அதிகமான தமிழ் வாசகர்கள் கொண்ட ஒரு சூழலை உருவாக்கும்.
அதிகம் பக்கம் கொண்ட நாளிதழை நாம் வாசிக்கலாம். சிந்திப்போம்.....கைகொடுப்போம்.......
நம் மொழிக்காக....
நம் அடுத்த தலைமுறைக்காக....
இது நம்மால் சாதிக்க முடியும்.....
சிறிய சிறிய மாற்றம்........நம்மால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம் ...
எதோ நம்மால் முடிந்ததை செய்வோம்....
எல்லாமே நம் கையில்

வியாழன், 27 நவம்பர், 2008

தீவிரவாதம்

வீரர் என்ற போர்வையில்
கோழைகள் நடத்தும் யுத்தம்......
லட்சியவாதி என்ற போர்வையில்
லட்சியாமில்லாத போரில்
பல உயிரினங்களை
கண்மூடித்தனமாய்
அழிக்கும் சட்டம்....
புலி குறி பார்த்து கொள்ளும்..
கழுகு குறி பார்த்து கொள்ளும்...
தீவிரவாதி .......??????????

திங்கள், 24 நவம்பர், 2008

மாற்றம்

வாழ்க்கையில் மாற்றம் என்பது நிலையானது.
இன்றைய நிலையை விட நாளை
மேலும் நல்ல நிலயை அடைய வேண்டும் . நாம் நம்மிடம் உள்ள குறைகளை கண்டு கோபப்படுகிறோம், புலம்புகிறோம்...
இவற்றிலிருந்து நாம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தலாம் ?
  • முதலில் நமதுa சிந்தனையில் தெளிவு தேவை. நமக்கு எது முக்கியம் என்பதனை நிர்ணயம் செய்வது அவசியம்.
  • பிறகு மற்றதை ஏற்படுத்தினால் நமக்கு என்ன நன்மை என்று பட்டியலிட வேண்டும். மாறாவிட்டால் நாம் எதிர்நோக்கவிருக்கும் பிரச்சனைகளையும் பட்டியலிட வேண்டும். அப்போதுதான் மாற்றத்தின் அவசியம் நமக்கு தெள்ளதெளிவாக புரியும்.
  • எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவது என்று தீவிரமாக யோசித்து அதன் படி நடக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு நீங்கள் புதிய மாற்றத்தில் கவனமாக செயல்பட்டு வந்தால் அதுவே ஒரு பழக்கமாக மாறி விடும்.
  • தினமும் சுயமதிப்பிடு செய்து உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள்....

ஞாயிறு, 23 நவம்பர், 2008

தடை கற்களும் படி கற்களும்

அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றோம்.
பல மகிழ்ச்சியான சூழ்நிலைகளையும் எதிர்நோக்கின்றோம்.
மகிழ்ச்சியும் இன்னல்களும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு சூழல்களையும் நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை பொருத்தே நம் வாழ்க்கை அமைகிறது.
முதலில்........
மகிழ்ச்சியோ..... துன்பமோ ......
அதை ஏற்று கொள்கிற பக்குவம் நமக்கு வேண்டும்.....
பிறகு நாம் அணுகும் முறையை ஆராய வேண்டும்...
நல்ல முறையில் அணுகுமாயின் நமக்கு நல்ல பலன்கள் கிட்டும் ,
ஆராயாமல் அவசரப்பட்டு அணுகுமாயின் நமக்கு துன்பம் அதிகரிக்கும்.
ஆக
நம் வாழ்க்கையை பார்க்கும் விதம் நம் வாழ்க்கை நிலயை நிர்ணயம் செய்கிறது.
மதியை கொண்டு விதியையும் வெள்ளலாம் என்று நாம் படித்துள்ளோம்.
தடை கற்களை வெற்றி கற்களாக பாருங்கள்....
தடை கற்களை வீசி எறிவது எப்படி என்று யோசியுங்கள்.....
மதியைக் கொண்டு ஆக்ககரமாக செயல்படுங்கள்..

திங்கள், 17 நவம்பர், 2008

கடவுள்

வெளியே தேடினேன்
ஆகாசத்தில் தேடினேன்
மண்ணில் தேடினேன்
கோவிலில் தேடினேன்
குருகுலத்தில் தேடினேன்
சூரியனை காட்டினர்
சிலையைக் காட்டினர்
யானையைக் காட்டினர்
சில மனிதர்களையும் காட்டினர் கடவுள் என்று.........
கண்டேன் அனைத்தையும் ........
அவற்றில்
கடவுளை மட்டும் காணவில்லை.
நாத்திகன் ஆனேன் .

வாழ்க்கை பல கடந்து
துன்பம் வந்த போது
அமைதியை தேடினேன்
அதில் கடவுள் தெரிந்தது......
என் உள்ளே இருக்கும் கடவுள் தெரிந்தது....
உணர்வாக தெரிந்தது ........
சக்தியாக தெரிந்தது.,.....
என்னை நான் புரிந்து கொண்டால்
நானே கடவுள்........

வாழ்க்கை


வாழ்க்கை

பிறந்தோம் ,

வளர்ந்தோம் ,

வாழ்ந்தோம் ,

இறந்தோம் ,

இடையில் என்ன சாதித்தோம் ,

கடந்த காலத்தை கண்டு கவலை வேண்டாம் ,

எதிர் காலத்தை கண்டு பயம் வேண்டாம் ,

நிகழ் காலத்தில் வாழ் ,

லட்சியத்தோடு வாழ்,

நெறியோடு வாழ் ,

சந்தோசமாக வாழ் ,

உழைத்து வாழ்,

வாழ்கை சுகமாகும்.

வாழ்க்கையை நேசி ...............சனி, 15 நவம்பர், 2008

கல்வி
இது கல்வி யுகம்.
முன்பு ஆயுதங்களை கொண்டு உலக நாடுகளை ஆண்டது ஒரு காலம்.
இன்று அறிவை கொண்டு உலகை ஆழலாம்.
கல்வி அறிவை பயன் படுத்தி பல அற்புதங்களை நிகல்த்தலாம்.

வணக்கம் ,இது எனது முதல் முயற்சி.

தவறுகள் இருக்குமாயின் மண்ணிகுமாறு வேண்டுகிறேன் .

பல அரிய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த அகப்பக்கம் உதவும்,