ஞாயிறு, 23 நவம்பர், 2008

தடை கற்களும் படி கற்களும்

அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றோம்.
பல மகிழ்ச்சியான சூழ்நிலைகளையும் எதிர்நோக்கின்றோம்.
மகிழ்ச்சியும் இன்னல்களும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு சூழல்களையும் நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை பொருத்தே நம் வாழ்க்கை அமைகிறது.
முதலில்........
மகிழ்ச்சியோ..... துன்பமோ ......
அதை ஏற்று கொள்கிற பக்குவம் நமக்கு வேண்டும்.....
பிறகு நாம் அணுகும் முறையை ஆராய வேண்டும்...
நல்ல முறையில் அணுகுமாயின் நமக்கு நல்ல பலன்கள் கிட்டும் ,
ஆராயாமல் அவசரப்பட்டு அணுகுமாயின் நமக்கு துன்பம் அதிகரிக்கும்.
ஆக
நம் வாழ்க்கையை பார்க்கும் விதம் நம் வாழ்க்கை நிலயை நிர்ணயம் செய்கிறது.
மதியை கொண்டு விதியையும் வெள்ளலாம் என்று நாம் படித்துள்ளோம்.
தடை கற்களை வெற்றி கற்களாக பாருங்கள்....
தடை கற்களை வீசி எறிவது எப்படி என்று யோசியுங்கள்.....
மதியைக் கொண்டு ஆக்ககரமாக செயல்படுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக